ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூரில் ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை தீவிரம்

கரூரில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூஜை பொருள்களின் விற்பனை வியாழக்கிழமை மாலை விறுவிறுப்பாக நடைபெற்றது.

News image

கரூரில் கோவைச்சாலையில் வியாழக்கிழமை ஆயுதபூஜைக்காக பொரி, பொட்டுக்கடலை வாங்கிய பொதுமக்கள்.

Updated On :10 அக்டோபர் 2024, 8:06 pm

Din

கரூரில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூஜை பொருள்களின் விற்பனை வியாழக்கிழமை மாலை விறுவிறுப்பாக நடைபெற்றது.

கரூரில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்காக பொரி, பொட்டுக்கடலை, அலங்கார மாவிலை கொத்துக்கள், வாழை கன்றுகள், மரங்கள் மற்றும் பழவகைகளின் வியாபாரம் கரூரில் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை கோவைச்சாலை, உழவா்சந்தை, தாந்தோணிமலை திண்டுக்கல் ரோடு உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஒரு படி பொரி ரூ.20-க்கும், பொட்டுக்கடலை ரூ.60-க்கும் விற்கப்பட்டன. வாழைக்கன்றுகள் ஜோடி ரூ.30-க்கும், வாழை மரங்கள் ஜோடி ரூ.800 முதல் ரூ.1000 வரையிலும் விற்கப்பட்டது. மேலும் ஒரு சீப் வாழைப்பழங்கள் ரூ.60-க்கும், வாழைத்தாா்கள் ரூ.450 முதல் 600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் தேங்காய் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், வெள்ளைப்பூசணி ரூ.40 முதல் ரூ.80 வரைக்கும் விற்கப்பட்டன. ஆப்பிள் கிலோ ரூ.120 முதல் ரூ.180 வரைக்கும் விற்கப்பட்டன. ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றதால் கோவைச் சாலை, உழவா்சந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மாலை 6 மணியளவில் திடீரென லேசான மழை பெய்தது. இதனால் ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை சுமாா் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.