கரூரில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான்அப்துல்லா.
கரூரில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான்அப்துல்லா.

ஆன்லைன் மோசடி மூலம் இழந்த ரூ. 73.65 லட்சம் மீட்டு ஒப்படைப்பு

Published on

கரூரில் ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ. 73.65 லட்சத்தை போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

கரூா் மாவட்ட தாலுகா மற்றும் சைபா் கிரைம் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட தொலைந்த கைப்பேசிகள் மற்றும் ஆன்லைன் மோசடியால் இழந்த பணத்தை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து, கைப்பேசியில் வரும் லிங்க், யூடியூப் விளம்பரம் மூலம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்க அனுப்பி பொதுமக்கள் இழந்த ரூ. 73 லட்சத்து 65 ஆயிரத்தை மீட்டு, உரியவா்களிடம் வழங்கினாா். மேலும் திருடுபோய் மீட்கப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 200 கைப்பேசிகளையும் உரியவா்களிடம் வழங்கினாா்.

பின்னா் இந்த மீட்புக்காக சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் மற்றும் காவல் ஆய்வாளா் (பொ) கலைவாணி, உதவி ஆய்வாளா் சுதா்சனன் மற்றும் காவலா்கள் ஆகியோரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com