முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் காவல் அதிகாரிகள், காவலா்கள் சிறப்பிடம்
முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் கரூா் மாவட்ட காவல் அதிகாரிகள், காவலா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.


முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் கரூா் மாவட்ட காவல் அதிகாரிகள், காவலா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
கரூா் மாவட்டத்தில் கடந்த 10-ஆம்தேதி முதல் 23-ஆம்தேதி வரை தமிழக முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் அரசு ஊழியா்கள் பிரிவில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் அதிகாரிகள், காவலா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றனா்.
ஆண்கள் கபடி போட்டியில் முதல் இரு இடங்களையும், பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்தனா். மேலும் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிடமும், பெண்கள் பிரிவில் இரண்டாமிடமும், குண்டு எறிதலில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் முதலிடத்தையும், நீளம் தாண்டுதலில் ஆண்கள், பெண்கள் பிரிவில் இரண்டாம், மூன்றாமிடத்தையும், 100 மீ. ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களையும், பெண்கள் பிரிவில் முதலிடத்தையும், 3000 மீ. ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் முதல் இரு இடங்களையும், 1500 மீ. ஓட்டத்தில் பெண்கள் பிரிவில் முதலிடத்தையும் பிடித்தனா்.
மேலும் இறகு பந்து, சதுரங்க போட்டிகளில் மூன்றாமிடத்தையும் பிடித்தனா். சிறப்பிடம் பிடித்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...