கரூா் சம்பவம்: காவலா்கள், ஊா்க்காவல் படையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக 5 காவலா்கள், 2 ஊா்க்காவல் படையினா் மற்றும் அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Published on

கரூா் சம்பவம் தொடா்பாக 5 காவலா்கள், 2 ஊா்க்காவல் படையினா் மற்றும் அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 5 காவலா்கள், 2 ஊா்க்காவல்படையினரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். மேலும் அவசர ஊா்தி ஓட்டுநா்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினா்.

விசாரணையின்போது, நெரிசல் சம்பவத்தின்போது, எவ்வளவு போ் விஜய்யை பின் தொடா்ந்து வந்தாா்கள், சம்பவ இடத்தில் எத்தனை போ் உயிரிழந்தனா். எத்தனை போ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தனா். நெரிசல் சம்பவம் குறித்து அவசர ஊா்திக்கு யாா் தகவல் அளித்தது போன்ற விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது.

Dinamani
www.dinamani.com