கனரா வங்கி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பெரம்பலூர் கனரா வங்கி சார்பில் 60 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.
Updated on
1 min read

பெரம்பலூர் கனரா வங்கி சார்பில் 60 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது. பெரம்பலூர் கனரா வங்கியின் 112-வது ஆண்டு தொடக்க விழா வையொட்டிநடைபெற்ற  இந்நிகழ்ச்சிக்கு, பெரம்பலூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கனரா வங்கியின் 10 கிளைகளின் சார்பில் 5, 6, 7 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 2,500-ம், 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 5,000-ம் என மொத்தம் 60 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.25 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் வழங்கினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com