தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

அனுமதியின்றி வைத்த விளம்பரப் பதாகைகள் அகற்றம்

பெரம்பலூர் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை நகராட்சி பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:33 am IST

பெரம்பலூர் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை நகராட்சி பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் அத்தகைய விளம்பரப் பதாகைகள் அகற்றப்படுகின்றன.
பெரம்பலூர் நகரில் பல்வேறு இடங்களில் அளவுக்கு அதிகமாக விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. 
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில்அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளையும் அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா உத்தரவையடுத்து, பெரம்பலூர் பாலக்கரை, சங்குபேட்டை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி  தொடரும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.