
கோரிக்கையை வலியுறுத்தி செப். 21-இல் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் செப்.21 ஆம் தேதி முழு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது
அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் செப்.21 ஆம் தேதி முழு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது என்றார் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் செந்தில்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே அனைத்து அரசு மருத்துவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்க வலியுறுத்தி ஆக.1 ஆம் தேதி முதல் பல்வேறுகட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. வருகிற சனிக்கிழமை (செப்.1) முதல் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆய்வுப் பணிகளுக்கு வந்தால், அவற்றை புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக செப்.12ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம். எனவே, தமிழக அரசு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் செப்.21ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 18 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் மருத்துவர் செந்தில்.
பேட்டியின்போது, மாநில இணைத் தலைவர் லட்சுமி நரசிம்மன், மாவட்ட நிர்வாகிகள் அர்ச்சுணன், சுதாகர், ரமேஷ், ஆனந்தமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





