பெரம்பலூரில் தமிழியக்க முப்பெரும் விழா
பெரம்பலூர் தமிழியக்கம் சார்பில் கவியரங்கம், கவிதை நூல் வெளியீடு, விருது வழங்கல் ஆகிய முப்பெரும் விழா பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள அன்னை பருதமா மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூர் தமிழியக்கம் சார்பில் கவியரங்கம், கவிதை நூல் வெளியீடு, விருது வழங்கல் ஆகிய முப்பெரும் விழா பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள அன்னை பருதமா மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் செ. கணேசன் தலைமை வகித்தார். திருச்சி தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க. சிவசாமி, தமிழியக்கச் செயலர் பெ. பாரதி ஆறுமுகம், பொருளாளர் பெ. கசேந்திரன், புரவலர் பெ. நாகராஜன் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி கவிதை நூலை வெளியிட்டார். வேலூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் இரா. சிவராமன் விருது வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கில், கவியரங்கத் தலைவர்கள் பேராசிரியர் ப. செல்வகுமார், மணிமாறன், கோவிந்தராஜன் பாலு, இராம. வேல்முருகன் ஆகியோர் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், அப்துல் ரகுமான் ஆகியோரது சிறப்புகள் குறித்து பேசினர்.
தமிழியக்கத் தலைவர் கவிஞர் முத்தரசன் வரவேற்றார். கவிஞர் ராமர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...