புரட்டாசி மாதம் 3 ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. வீடுகளின் முன்பு பக்தர்கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ் கம்பப்பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. இரவு வாணவேடிக்கை மற்றும் தப்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நாட்டார்மங்கலம், கூத்தனூர், செட்டிகுளம், இரூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல, காருகுடி கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி கோயிலிலும், வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோயிலிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் விடிய, விடிய நடைபெற்ற சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ

குவாலிஃபையர் 1: ரஜத் படிதார் அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


