சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

ஷேர் ஆட்டோ -  டிராக்டர் மோதல்:  ஒருவர் சாவு

பெரம்பலூர்- ஆலம்பாடி சாலையைச் சேர்ந்த மருதமுத்து மகன் கனகராஜ் (53)  ஓட்டிவந்த ஷேர் ஆட்டோ பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில்

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பெரம்பலூர்- ஆலம்பாடி சாலையைச் சேர்ந்த மருதமுத்து மகன் கனகராஜ் (53)  ஓட்டிவந்த ஷேர் ஆட்டோ பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே எதிரே வந்த ராமகிருஷ்ணன் ஓட்டிவந்த டிராக்டர் மீது செவ்வாய்க்கிழமை மாலை மோதியது. இதில்,
எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த செல்வம் (42), வடக்குமாதவி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி கோகிலா (36), ஆட்டோ ஓட்டுநர் கனகராஜ் உள்பட 14 பேர் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு  பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
அவர்களில் செல்வம் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கோகிலா திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், செல்வம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீஸார் வழக்குப் பதிந்து, டிராக்டர் ஓட்டுநர் ராமகிருஷ்ணனைக் (45) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.