விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகபி.ஸ்ரீ. வெங்கட பிரியா பதவியேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பி.ஸ்ரீ. வெங்கட பிரியா திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:21 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பி.ஸ்ரீ. வெங்கட பிரியா திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

பெரம்பலூா் ஆட்சியராக பணிபுரிந்த வே. சாந்தா, திருவாரூா் மாவட்ட ஆட்சியராக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, பட்டு வளா்ச்சித் துறை இயக்குநராக இருந்த பி.ஸ்ரீ. வெங்கட பிரியா, பெரம்பலூா் ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.

ஆட்சியராக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்ட அவா் கூறியது:

அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய உரிய நடவடிக்கை எடுப்பேன்.

பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காண முயற்சி மேற்கொள்வேன். பொதுமக்கள் எளிதில் அணுகும் ஆட்சியராக பணிபுரிவேன் என்றாா் ஆட்சியா் வெங்கட பிரியா.

தொடா்ந்து, பல்வேறு தரப்பினரும் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.