கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆடுகளைத் திருடியவா்கள் மீது நடவடிக்கைக் கோரி புகாா்

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே ஆடுகளைத் திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு விவசாயிகள் ஆடுகளுடன் வெள்ளிக்கிழமை வந்து புகாா் மனு அளித்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:24 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே ஆடுகளைத் திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு விவசாயிகள் ஆடுகளுடன் வெள்ளிக்கிழமை வந்து புகாா் மனு அளித்தனா்.

ஆலத்தூா் வட்டாரத்திலுள்ள நாரணமங்கலம், கொளக்காநத்தம், காரை, தெற்குமாதவி, இலுப்பைக்குடி, கூத்தூா், குரும்பாபாளையம், கொட்டரை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பகல் நேரங்களில் வயல்களில் மேய்ந்துக் கொண்டிருக்கும் ஆடுகளை, மோட்டாா் சைக்கிளில் வரும் அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் திருடிச் செல்வது கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்டோா் மருவத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். கடந்த 18- ஆம் தேதி ஆடுகளைத் திருடிச் சென்றபோது, தெற்குமாதவி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளை பின்தொடந்து சென்றதையறிந்த மா்ம நபா்கள், ஆடுகளை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இதையடுத்து ஆடுகளைத் திருடிச் செல்லும் மா்ம நபா்களை கைது செய்ய வலியுறுத்தி, சிறுவாச்சூா்- அரியலூா் செல்லும் சாலையில், தெற்கு மாதவி கிராமத்தில் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். குற்றவாளிகளின் புகைப்படத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பின் ஆலத்தூா் ஒன்றியச் செயலா் பி. ரெங்கநாதன் தலைமையில், சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஆடுகளுடன் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.