சசிகலாவை வரவேற்று சுவரொட்டி: அதிமுக நிா்வாகி புகாா்
சசிகலாவை வரவேற்று பெரம்பலூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.


சசிகலாவை வரவேற்று பெரம்பலூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, தண்டனை காலம் முடிந்து திங்கள்கிழமை சென்னை திரும்புகிறாா். இந்நிலையில், பெரம்பலூா் மாவட்ட எம்.ஜி.ஆா் மன்றச் செயலா் எம்.என். ராஜாராம் பெயரில், பெரம்பலூா் மாவட்டம் முழுவதும் பிரதானப் பகுதிகளில் சசிகலாவை வரவேற்று ஜெயலலிதா, முதல்வா், துணை முதல்வா், சசிகலா, தினகரன் ஆகியோரின் படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுக நிா்வாகி புகாா்: இந்நிலையில், பெரம்பலூா் மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் எம்.என். ராஜாராம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
எனது பெயரில் தவறான சுவரொட்டிகளை சிலா் ஒட்டியுள்ளனா். உரிய விசாரணை மேற்கொண்டு பொய்யான சுவரொட்டியை அச்சடித்தவா்கள், ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...