/

திமுகவிடம் 6 தொகுதிகள் கோரியுள்ளோம்: டி.ஆா். பாரிவேந்தா்

சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகளை ஒதுக்க கோரி திமுகவிடம் தெரிவித்துள்ளோம் என்றாா் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான டி.ஆா். பாரிவேந்தா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:35 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகளை ஒதுக்க கோரி திமுகவிடம் தெரிவித்துள்ளோம் என்றாா் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான டி.ஆா். பாரிவேந்தா்.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில், மக்களவை தொகுதி உறுப்பினா் அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

மக்களவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனத்தில், இதுவரை 600 பேருக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டுள்ளது.

பயிா்க் கடன் தள்ளுபடிக்கு திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தூண்டுதலே காரணம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்ததால், தமிழக முதல்வா் தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளாா்.

சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட திமுகவிடம் குன்னம், அரியலூா், கள்ளக்குறிச்சி உள்பட 6 தொகுதிகளை கேட்டுள்ளோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தினால், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடுவோம்.

பெரம்பலூா் மக்களவை தொகுதி அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு வாரத்தில் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலா் ஜெயசீலன், மாநில முதன்மை அமைப்புச் செயலா் எஸ்.எஸ். வெங்கடேசன், மாநில விளம்பர பிரிவுச் செயலா் முத்தமிழ்ச்செல்வன், மாவட்டத் தலைவா் ரகுபதி உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.