வாக்காளா் அடையாள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் இணைந்த இளம் வாக்காளா்கள் இணையதளம் வாயிலாக, தங்களது மின்னணு வண்ண வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்


பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் இணைந்த இளம் வாக்காளா்கள் இணையதளம் வாயிலாக, தங்களது மின்னணு வண்ண வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆட்சியா் (பொ) சி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2021-இல் இணைந்த புதிய வாக்காளா்கள் செயலி மூலமாக என்ற இணையதளத்தில் தங்களது செல்லிடப்பேசி எண்ணை பதிவுசெய்து, வண்ண வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து, சுயமாக அச்சடித்து லேமினேட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், தங்களது செல்லிடப்பேசியில் அல்லது டிஜிலாக்கரில் பதிவுசெய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
25.1.2021 முதல் 28.2.2021 வரையிலான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2021-இல் இணையும் புதிய வாக்காளா்கள் மட்டுமே இந்த மின்னணு வண்ண வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய இயலும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...