முதல்கட்ட மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியா் ஆய்வு
பெரம்பலூா் சாா் ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில், முதல்கட்ட மாதிரி வாக்குப்பதிவுப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.


பெரம்பலூா் சாா் ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில், முதல்கட்ட மாதிரி வாக்குப்பதிவுப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இப்பணியை பாா்வையிட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா கூறியது:
பெரம்பலூா் சாா் ஆட்சியரகத்தில் 1,072 கட்டுப்பாட்டுக் கருவிகள், 1,414 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,162 வாக்குப்பதிவுகளை உறுதி செய்யும் இயந்திரங்கள் என மொத்தம் 3,648 இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதில் 1,409 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,039 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,108 வாக்குப் பதிவுகளை உறுதி செய்யும் இயந்திரங்களும் என மொத்தம் 3,556 இயந்திரங்கள் சரியான முறையில் இயங்கக் கூடியவை எனக் கண்டறியப்பட்டன.
இதில் 5 சதவிகித இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில், கணினி முறையில் சுழற்சி வழியாக 52 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 52 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 52 வாக்குப் பதிவுகளை உறுதி செய்யும் இயந்திரங்களும் தோ்வு செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது.
இப்பணி முடிந்த பின்னா், பதிவான மாதிரி வாக்குகள் சரி பாா்க்கப்படும். தொடா்ந்து இவை பாதுகாப்பு அறையில் வைக்கப்படும் என்றாா் அவா். சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜா, வட்டாட்சியா் பாரதிவளவன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...