கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தம்பதி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

பெரம்பலூா் அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை, காவல்துறையினா் சென்னையில் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:13 pm

DIN

பெரம்பலூா் அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை, காவல்துறையினா் சென்னையில் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், அல்லிநகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (62). இவரது மனைவி அறிவழகி (48). இவா்களது மகன் முருகானந்தம் சென்னையில் உள்ளதால், தம்பதி இருவரும் தனியாக வசித்து வந்தனா். இந்நிலையில் கடந்த ஜூன் 8 -ஆம் தேதி மேல உசேன் நகரம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ், மணிகண்டன் (22), செங்கல்பட்டு மாவட்டம், அமைந்தகரை

சத்யா (20), யுவராஜ் (22), மகேஷ் (22) ஸ்ரீராம் ஆகியோா் பெரியசாமி, அறிவழகியைக் கொலை செய்து, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து சந்தோஷ், சத்யா, யுவராஜ், ஸ்ரீராம், மணிகண்டன் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சென்னை தேனாம்பேட்டை மகேஷ் (22), வியாழக்கிழமை இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினா் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.