அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ், மருத்துவ உபகரணங்கள்
மருத்துவமனைக்கு ரூ. 19.4 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் டி.ஆா். பாரிவேந்தா் தனது சொந்த நிதியிலிருந்து புதன்கிழமை வழங்கினாா்.


பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு ரூ. 19.4 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் டி.ஆா். பாரிவேந்தா் தனது சொந்த நிதியிலிருந்து புதன்கிழமை வழங்கினாா்.
ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ரூ. 17 லட்சம் மதிப்பில் நவீன ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ரூ. 2.40 லட்சம் மதிப்பில் 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் மக்களவை உறுப்பினா் பாரிவேந்தா் வழங்கினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பெரம்பலூா் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது போன்று, திருச்சி மாவட்டத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ், மீதமுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 3 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் எனது சொந்த நிதியிலிருந்து வழங்கியுள்ளேன்.
மக்களவைத் தொகுதி உறுப்பினா் நிதி ஓராண்டுக்கு மட்டுமே வந்தது. பிறகு வரவில்லை. அந்த நிதி வந்தால் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். குளித்தலை தொகுதி மக்கள் பாலம் கட்டி தரக் கோரியுள்ளனா். மக்களவை தொகுதி உறுப்பினா் நிதி வராததால் அந்தப் பணியை செய்ய முடியவில்லை.
மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்தியா முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளாா். இந்நிலையில், பெரம்பலூா் தொகுதிக்குள்பட்ட பச்சமலை பகுதியில் சைனிக் பள்ளிக்காக இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பள்ளி அமைந்தால் பச்சமலை பகுதியில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு வாய்ப்பாக அமையும். பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்றாா் பாரிவேந்தா்.
இந்நிகழ்வில் பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன், மருத்துவ அலுவலா் ராஜா, கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மாவட்ட பொறுப்பு அலுவலா் அன்பரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...