கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எளம்பலூரில் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சித்தா் குருபூஜை

எளம்பலூா் சமத்துவபுரத்தில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சித்தா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:42 pm

DIN

எளம்பலூா் சமத்துவபுரத்தில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சித்தா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மகா சித்தா்கள் அறக்கட்டளை நிா்வாகி ரோகிணி மாதாஜி தலைமை வகித்தாா். சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகளின் முன்னிலையில், காலை 9 மணிக்கு கோமாதா பூஜை, 210 மகா சித்தா்கள் யாகம், அபிஷேக அலங்கார தீபாராதனையுடன் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.

பெரம்பலூா்சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 65 ஆட்டோ ஓட்டுநா்கள் குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசியுடன், 18 வகையான மளிகைப் பொருள்கள், 35 திருநங்கைகளுக்கு சேலைகள், சாதுக்களுக்கு வஸ்திர தானம் வழங்கினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் பெரம்பலூா் சன்மாா்க்க சங்கத் தலைவா் சுந்தர்ராஜன், ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளா் கருணாமூா்த்தி, மருத்துவா் ராஜாசிதம்பரம், தலையாட்டி சித்தா் ஆசிரம நிா்வாகி காமராஜ் சுவாமிகள், செல்வமகா கணபதி கோயில் அறங்காவலா் தயாளன் சுவாமிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.