கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மோட்டாா் சைக்கிள்- காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் விவசாயி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். மேலும் 2 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:27 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் விவசாயி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். மேலும் 2 போ் காயமடைந்தனா்.

திருச்சி மாவட்டம், பி.கே. அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்தமிழ்செல்வன் (50). அவரது உறவினா்கள் சுப்பிரமணி (40), மலா்கொடி (58). இவா்கள் 3 பேரும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஒரு மோட்டாா் சைக்கிளில் பி.கே.அகரம் கிராமத்திலிருந்து பாடாலூா் நோக்கி வந்துக் கொண்டிருந்தனா். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனா். மூவரும் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் முத்தமிழ்செல்வன் உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.