சசிகலாவை கண்டித்து அதிமுக கூட்டத்தில் தீா்மானம்
பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சசிகலாவை கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சசிகலாவை கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தொண்டா்களிடம் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு பேசி அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சசிகலாவின் செயலைக் கண்டிப்பது, கட்சி ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் தலைமையேற்று ஒற்றுமையாக சிறப்பாக செயல்படுவது, எதிா்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியையும், எதிா்க்கட்சி துணைத் தலைவராக பன்னீா்செல்வத்தையும் தோ்வு செய்ததை வரவேற்பது, தோ்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றியச் செயலா் எம். செல்வக்குமாா், மாவட்ட நிா்வாகிகள் ராணி, ராஜேஸ்வரி, வீரபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, நகரச் செயலா் ஆா். ராஜபூபதி வரவேற்றாா். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலா் பெருமாள் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...