கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிரசவித்த தாய்மாா்கள் தடுப்பூசிசெலுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:39 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவித்த 51 தாய்மாா்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட தாய்மாா்கள் எவ்வித பக்க விளைவுகளின்றி பூரண நலத்துடன் உள்ளனா்.

எனவே, பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தாங்களாகவே முன்வந்து இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மேலும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.