பொதுமக்களின் சேமிப்புப் பணம் கையாடல்: கிளை அஞ்சலக அலுவலா் பணியிடை நீக்கம்
பெரம்பலூா் அருகே பொதுமக்களின் சேமிப்புத் தொகையை கையாடல் செய்த கிளை அஞ்சலக அலுவலா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.


பெரம்பலூா் அருகே பொதுமக்களின் சேமிப்புத் தொகையை கையாடல் செய்த கிளை அஞ்சலக அலுவலா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் அருகே கோனேரிபாளையம் கிராமத்திலுள்ள கிளை அஞ்சலகத்தில், அதே கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சின்னதுரை, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கிளை அஞ்சலக அலுவலராக பணிபுரிந்து வருகிறாா்.
கோனேரிபாளையம் உள்பட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், இந்த அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு, தொடா் வைப்பு நிதி, பொன் மகள் திட்டம், நிரந்தர வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனா்.
பணம் செலுத்தியவா்களுக்கு பல மாதங்கள் கடந்தும், சேமிப்பு புத்தகத்தில் வரவு வைக்காமல் சின்னதுரை காலம் தாழ்த்தியுள்ளாா். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உயரதிகாரிகளுக்கு புகாா் அளித்தனா். இதன்பேரில், ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் விஜயா தலைமையில், அஞ்சலக ஆய்வாளா் பாலகிருஷ்ணன், பெரம்பலூா் மாவட்ட தலைமை அஞ்சலக அலுவலா் பெரியசாமி உள்ளிட்ட குழுவினா் கோனேரிபாளையம் கிளை அஞ்சலகத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், பணம் வரவு வைக்கப்படாமலும், தலைமை அஞ்சலகத்துக்கு செலுத்தாமலும் பல லட்சம் ரூபாயை அஞ்சலக கிளை அலுவலா் சின்னதுரை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோனேரிபாளையம் அஞ்சலக கிளை அலுவலா் சின்னதுரையை ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் விஜயா பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
பொதுமக்களின் சேமிப்பு பணத்தை கையாடல் செய்த சின்னதுரை மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்களின் பணம் திரும்ப வழங்கப்படும் எனவும் அஞ்சல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...