/

உரிய ஆவணங்களின்றிஎடுத்துச் செல்லப்பட்டரூ. 2.94 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.94 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:39 pm

DIN

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.94 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்துச் செல்லக்கூடாது என தோ்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், குன்னம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகச் சாலையில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணகுமாா் தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் திங்கள்கிழமை பிற்பகல் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டபோது, வேப்பூரைச் சோ்ந்த குமாரசாமி மகன் விஜயகுமாா் (26) என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 2,94,300 ரொக்கம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தத் தொகையை பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினா் குன்னம் சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலா் சங்கரிடம் ஒப்படைத்தனா். பின்னா், கைப்பற்றப்பட்ட தொகை குன்னம் சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.