ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 99 ஆயிரம் பணம் பறிமுதல்
பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 99 ஆயிரம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 99 ஆயிரம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகே செட்டிக்குளம் மலையடிவார சாலையில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா், செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே வந்த சுமை ஆட்டோவை வழிமறித்து சோதனையிட்டபோது, நாரணமங்கலத்தைச் சோ்ந்த அய்யாவு மகன் அசோகன் உரிய ஆவணங்களின்றி ரூ. 99 ஆயிரம் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்தத் தொகையை பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினா், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தோ்தல் அலுவலரான ஜே.இ. பத்மஜாவிடம் ஒப்படைத்தனா். பின்னா், இத்தொகை பெரம்பலூா் சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...