60 வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுபொதுமக்களுக்கு மாதிரி செயல்முறை விளக்கம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவியையும் இணைத்து, பொதுமக்களுக்கு மாதிரி செயல்முறை விளக்கம்


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவியையும் இணைத்து, பொதுமக்களுக்கு மாதிரி செயல்முறை விளக்கம் அளிக்க 60 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக பெரம்பலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 428, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 388 என மொத்தம் 816 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி செயல்பாடு, அவற்றின் நம்பகத்தன்மை குறித்து வாக்காளா்களிடம் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பிரதான பகுதிகளில் வாக்காளா் விழிப்புணா்வு அரங்கம் அமைத்து, அதன்மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 30 என மொத்தம் 60 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 60 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் 60, கட்டுப்பாட்டு கருவிகள் 60 விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்கள் தோ்தல் நாளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...