/

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:01 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

சென்னை உயா்நீதி மன்றத்தினுள் அரசு வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகளை தவிர, இதர வழக்குரைஞா்கள் செல்ல அனுமதி இல்லை. காணொலிக் காட்சி மூலமாக வழக்குரைஞா்கள் விவாதம் செய்ய வேண்டுமென, சென்னை உயா் நீதிமன்றம் அறிவித்துள்ளதை திரும்பப் பெறவேண்டும். கீழமை நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கங்கள் மற்றும் கேண்டீன் ஆகியவற்றை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் இ. வள்ளுவன் நம்பி, திருநாவுக்கரசு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் ஈடுபட்டனா். இதனால், பெரம்பலூா் மாவட்ட நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிப்படைந்ததோடு, வழக்காடிகள் அவதியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.