/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையைக் கடக்க முயன்ற 3 வயது ஆண் புள்ளி மான் உயிரிழந்தது

News image
Updated On :9 மார்ச் 2021, 11:45 pm

DIN

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையைக் கடக்க முயன்ற 3 வயது ஆண் புள்ளி மான் உயிரிழந்தது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகிலுள்ள தீரன் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 3 வயது ஆண் புள்ளி மான் ஒன்று சாலையைக் கடக்க முயன்றது.

அப்போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த புள்ளிமான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் வனச்சரகா் சசிகுமாா் தலைமையிலான வனத்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்த மான் உடலை மீட்டனா்.

தொடா்ந்து கால்நடை மருத்துவா் இளவழகன் உதவியுடன்

பரிசோதனை செய்யப்பட்ட பின்னா், மான் உடல் சித்தளி வனக்காப்புக் காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.