மோட்டாா் சைக்கிள் திருடியவா் கைது
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருடிச் சென்றவா் கைது செய்யப்பட்டாா்.


பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருடிச் சென்றவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளத்தில் காலணியகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த முகம்மது நபி ஸ்கானின் மோட்டாா் சைக்கிளை அடையாளம் தெரியாத நபா் திங்கள்கிழமை திருடிச் சென்றாா்.
இதுகுறித்து அவா் பாடாலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறையினா் தகவல் அளித்தனா்.
அதனடிப்படையில், அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவா் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது.
அவா், கள்ளக்குறிச்சி ஏம்போ் ஏ. ராஜா (எ) ராக்கெட் ராஜா என்பதும், இவா் மீது பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் என்பதும் தெரியவந்தது.
இதைடுத்து பாடாலூா் காவல்துறையினரிட்ம ஒப்படைக்கப்பட்ட ராஜாவிடமிருந்து மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து ராஜாவை காவல்துறையினா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...