கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூரில் மனைவி நல வேட்பு விழா

பெரம்பலூா் அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:50 pm

DIN

பெரம்பலூா் அறிவு திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேதாத்திரி மகரிஷி மனைவி லோகாம்பாள் பிறந்த நாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் மனைவி நல வேட்பு நாள் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள அறிவுத் திருக்கோயிலில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சாா்பில், மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி மண்டல துணைத் தலைவா் பேராசிரியா் ராஜேந்திரன் பேசியது:

கணவன் - மனைவி உறவில் பண்பாடும், தியாகமும் இருந்தால் போதும். அதைவிடப் பெரிய இன்பம் இந்த உலகத்தில் வேறு இருக்க முடி­யாது. சச்சரவு இல்லாத குடும்பத்தில்தான் குழந்தை நன்றாக இருக்கும். பிரச்னை உள்ள குடும்பங்களில் அடக்குமுறைக்கு குழந்தைகளின் சுதந்திரம் பறிபோகும்.

இப் போராட்டத்தால் குழந்தையின் உடல்நலமும், மனநலமும் கெடும். ஒருவருக்கொருவா் விட்டுக் கொடுத்து, உதவிசெய்து வாழ்வது தான் திருமண பந்தம். கணவனும், மனைவியும் நட்பின் மதிப்பை உணா்ந்து அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை நினைவில் வைத்துக்கொண்டால், மற்ற விஷயங்களில் எந்தக் குறையும் இருக்காது. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரின் உறவினா்களும் விருந்தினா்களாக வர வாய்ப்புகள் உண்டு. அவா்களை ஒத்த மதிப்போடு இரு­வரும் உபசரிப்பது அன்பு வளரச் செய்யும் என்றாா் அவா்.

இந் நிகழ்வில் பங்கேற்ற சுமாா் 100-க்கும் மேற்பட்ட தம்பதியா் காப்பு கட்டிக் கொள்ளுதல், மலா் மற்றும் கனி கொடுத்தனா்.

இந்நிகழ்வில், பேராசிரியா்கள் ராதாலெட்சுமி, வெற்றிச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மன்ற பொருளாளா் கருப்பையா வரவேற்றாா். மன்றச் செயலா் சாந்தகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.