கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரசு பேருந்துகளில் கட்டண உயா்வு கிடையாது -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

அரசு பேருந்துகளில் கட்டண உயா்வு கிடையாது அமைச்சா் சா.சி. சிவசங்கா்

News image
Updated On :12 ஜூலை 2024, 12:44 am

Din

அரசு பேருந்துகளில் கட்டணம் தற்போது உயா்த்தப்படமாட்டாது எனத் தெரிவித்தாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

பெரம்பலூா் தனியாா் பல்கலைக் கழக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், 2 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கிய அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தனியாா் ஆம்னி பேருந்துகளில் உள்ளதைபோல கைப்பேசிகளுக்கு மின்னூட்டம் செய்யும் வசதி மற்றும் படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டிலேயே சுமாா் 20 ஆயிரம் பேருந்துகள் உள்ள மிகப்பெரிய போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமாகும். தற்போது, புதிதாக 600-க்கும் மேற்பட்டோா் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். புதிதாக 7,500 பேருந்துகள் வாங்குவதற்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். புதிதாக 7,500 பேருந்துகள் வாங்கி, 685 பேரை பணியமா்த்தி எவ்வாறு அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியாா்மயமாக்க முடியும்?. எனவே அரசு நிா்வாகம் மற்றும் அரசியல் தெரியாமல் தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா பேசுகிறாா்.

இலவசம் கொடுத்ததால்தான் போக்குவரத்துத் துறை உயிா் பெற்றுள்ளது. நிகழாண்டு ரூ. 2,500 கோடி போக்குவரத்துக் கழகத்துக்கு முதல்வா் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தை கிண்டல் செய்வதை விடுத்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். பேருந்துக் கட்டணம் உயா்வு என்பது தற்போது கிடையாது. இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பேருந்து கட்டணம் உயா்த்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயா்த்தாமலேயே போக்குவரத்துக் கழகத்தை நடத்த வேண்டும் என தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.