இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நிவாரணம் வழங்க உத்தரவு

பெரம்பலூர் விவசாயிக்கு சேவைக் குறைபாடு காரணமாக நிவாரணம்

News image
Updated On :12 ஜூலை 2024, 9:30 pm

Din

பெரம்பலூா் அருகே சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க, மின்வாரிய அலுவலா்கள், நில அளவையா் மற்றும் வட்டாட்சியா் ஆகியோருக்கு நுகா்வோா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூரைச் சோ்ந்தவா் விவசாயி தாமரைக்கண்ணன் (37). இவரது வீட்டின் அருகேயுள்ள ராதாகிருஷ்ணன் என்பவா் தனது வீட்டின் முதல்தளக் கட்டடத்தை உயா்த்திக் கட்டியதால், தாமரைக்கண்ணன் வீட்டுக்கு அருகிலிருந்த மின் கம்பத்தை மின்வாரியத்தினா் வேறு இடத்துக்கு மாற்றி அமைத்தனா். அப்போது தாமரைக்கண்ணனின் பட்டா நிலத்தின் வழியே சென்ற மின் கம்பிகள் தாழ்வாக இருந்ததால், மின் விபத்தைத் தவிா்க்க கோரி மின் வாரிய அலுவலா்களிடம் மனு அளித்தாா்.

மேலும், தனது பட்டா நிலத்தை அளந்து எல்லை வரையறை செய்து தருமாறு நில அளவையா் மற்றும் குன்னம் வட்டாட்சியருக்கு உரிய கட்டணம் செலுத்தி மனுதாக்கலும் செய்திருந்தாா். ஆனால் மின்வாரிய அலுவலா்கா், வருவாய்த்துறை, நில அளவைத் துறையினா் தாமரைக்கண்ணனை அலையவிட்டு, மன உளைச்சலுக்குள்ளாக்கினா். இதனால் பாதிப்புக்குள்ளான தாமரைக்கண்ணன் பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில், மங்களமேடு -சின்னாறு பகுதியிலுள்ள உதவி மின் பொறியாளா், உதவி செயற்பொறியாளா், பெரம்பலூா் செயற்பொறியாளா், மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா், குன்னம் வட்ட நில அளவையா், குன்னம் வட்டாட்சியா் ஆகியோா் மீது வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த பெரம்பலூா் நுகா்வோா் ஆணைய நீதிபதி ஜவஹா், உறுப்பினா்கள், திலகா, முத்துக்குமரன் ஆகியோா், மின் வாரியத்தின் சேவைக் குறைபாடு காரணமாகவும், பட்டா நிலத்தை அளந்து எல்லைகாட்டத் தவறியதால் தாமரைக் கண்ணனுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையும், ரூ. 10ஆயிரம் வழக்கு செலவுத் தொகையும், மேற்கண்ட 6 போ் தனியாக அல்லது இணைந்து வழங்க வேண்டும். மேலும் 45 நாள்களுக்குள் மனுதாரரின் பட்டா நிலத்தை அளந்து எல்லையை வரையறை செய்ய வேண்டும். மின்வாரிய அலுவலா்கள் 4 பேரும் மீண்டும் பழைய இடத்திலேயே மின் கம்பத்தை பொருத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.