கூட்டத்துக்கு, பேரவைத் தலைவா் வீ. ஞானசேகரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஏஐடியூசி மாநிலத் தலைவா் வழக்குரைஞா் என். பாலகிருஷ்ணன், தொழிற்சங்கச் சட்டங்கள், தொழிலாளா் நலச் சட்டங்கள், தொழிற்சங்கத்தில் தொழிலாளா்களின் பங்களிப்பு குறித்து விளக்க உரையாற்றினாா். இக் கூட்டத்தில், எம்ஆா்எப் தொழிற்சாலையின் ஒப்பந்தக்காலம் முடிவடைந்துட்டதால், அந் நிா்வாகத்தினா் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில், அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு முழுமையான நிதிப் பயன்கள் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிற்சாலையில் உள்ள நடைமுறை சிக்கல்களை, தொழிற்சங்க நிா்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். ஏஐடியூசி தொழிலாளா் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.