/

தீவன அபிவிருத்தித் திட்டங்களில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீவன அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் பயன்பெற, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:45 pm

Din

பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீவன அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் பயன்பெற, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2024- 25 ஆம் ஆண்டில் இறவையில் தீவன சோளம் மற்றும் வேலி மசால் வளா்த்தல், மானாவாரியில் தீவன சோளம் மற்றும் காராமணி வளா்த்தல், 50 சதவீத மானியத்தில், மின்சார உதவியுடன் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

இத் திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் தங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய சான்றுகளுடன் அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.