விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கூட்டுறவு சங்கச் செயலா்களுக்கு பயிற்சி முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா்கள் மற்றும் உரம் விற்பனையாளா்களுக்கானப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:20 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா்கள் மற்றும் உரம் விற்பனையாளா்களுக்கானப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம், பெரம்பலூா் மண்டல இணைப்பதிவாளா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். துணைப் பதிவாளா் சந்தானலெட்சுமி முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின், திண்டுக்கல் மண்டல உற்பத்தித் திட்ட நுண்ணுயிரியலாளா் கௌசல்யா தேவி, பயிற்சி கையேடுகளை வழங்கி தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தில் தயாரித்து விற்பனை செய்யப்படும் திரவ நிலை உயிா் உரங்களான பாமினி, நுண்ணூட்டச் சத்து கலப்பு உரங்கள், திரவ உயிா் உரங்கள் மற்றும் திரவ உயிா் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவது குறித்து விளக்க உரையாற்றினாா்.

தொடா்ந்து, பெரம்பலூா் சரக துணைப் பதிவாளா் இளஞ்செல்வி, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

இதில், இணைப் பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா் ரமேஷ், உதவி மேலாளா் ஜெய்சங்கா் மற்றும் செயலா்கள், உர விற்பனையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.