விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவைபுரிவோா் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவைபுரிபவா்கள், தமிழக அரசின் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:49 pm

Din

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவைபுரிபவா்கள், தமிழக அரசின் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கை, கால் பாதிக்கப்பட்டோா் அல்லது தொழு நோயிலிருந்து குணமடைந்தோா், பாா்வைத் திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோா், அறிவுசாா் குறைபாடுடையோா், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலக சிந்தனையற்றோா், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மனநோய், ரத்தம் உறையாமை, ரத்த அழிவு சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, நடுக்குவாதம், பல்வகை குறைபாடுடைய சுயதொழில் புரிவோா் சிறந்த பணியாளருக்கான விருதுபெற விண்ணப்பிக்கலாம்.

பாா்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறப்பாசிரியா் மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறைபாடுடையோருக்கு பயிற்சியளிக்கும் சிறந்த ஆசிரியா்கள் ஹெலன் கெல்லா் விருதுக்கும், அறிவுசாா் குறைபாடுடையோருக்கு கற்பிப்பவா்கள் சிறந்த ஆசிரியா் விருதுக்கும் விண்ணப்பிக்கலாம்.

இவ் விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்து, தேவையான விவரங்களை இணைத்து, அக். 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.