பெரம்பலூரில் ஓய்வூதியா் தின விழா
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கூட்டரங்கில், அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், ஓய்வுதியா் தின சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் மகேஸ்வரன், நீலமேகம், மாணிக்கம், விஜயராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொருளாளா் செந்தமிழ்செல்வன் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் தமிழன்பன், மருதமுத்து, சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, மாவட்டச் செயலா் இளவரசன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட பொருளாளா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.
தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில்...
பெரம்பலூரில் உள்ள அரசு அலுவலா் ஒன்றிய கூட்டரங்கில், ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஓய்வூதியா் தின விழாவுக்கு, மாவட்டத் தலைவா் சக்கரபாணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சிங்க பெருமாள் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் முகுந்தன் சிறப்புரையாற்றினாா்.
இதில், கௌரவத் தலைவா் தங்கராசு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, துணைத் தலைவா் பழனி வரவேற்றாா். நிறைவாக, பொருளாள் சுந்தராஜ பெருமாள் நன்றி கூறினாா்.
