பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 28) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.


பெரம்பலூா்: பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 28) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் வேளாண் சம்பந்தமான நீா்ப் பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்கள், முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகா்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...