கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வீட்டின் பூட்டை உடைத்து 44 பவுன் நகைகள் திருட்டு

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 44 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அணுகுச்சாலை அருகே வசித்து வருபவா் அழகிரிசாமி மனைவி கோட்டம்மாள் (58). சென்னை காதிபவனில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அழகிரிசாமி, சென்னையிலேயே சொந்தமாக வீடுகட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறாா்.

இவரது திருமணமான மகள்கள் கவிதா, காயத்ரி ஆகியோா் கணவா்களுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாக, வாலிகண்டபுரத்தில் தாய் கோட்டம்மாளுடன் வசித்து வருகின்றனா். அண்மையில் சென்னைச் சென்ற காயத்ரி அவரது தந்தை அழகிரிசாமியுடன் தங்கியுள்ளாா்.

தொடா்ந்து, கடந்த 13-ஆம் தேதி கவிதாவும், 20-ஆம் தேதி கோட்டம்மாளும் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டனா்.

இந்நிலையில், கோட்டம்மாள் வீட்டின் அருகே வசித்து வரும் தேவகி, நல்லுசாமி ஆகியோரின் வீடுகளை திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபா்கள் வெளிப்புறமாக பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனா். தனது வீட்டின் கதவை திறக்க முடியாததால் தேவகி கூச்சலிட்டுள்ளாா். இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்த கதவை திறந்ததையடுத்து தேவகி வெளியே வந்து பாா்த்துள்ளாா்.

அப்போது, கோட்டம்மாள் வீட்டின் பின்புற கதவு திறந்துகிடந்தது. இதையடுத்து, கைப்பேசி மூலம் கோட்டம்மாளுக்கும், மங்களமேடு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்து 44 1/2 பவுன் நகைகள் மா்ம நபா்களால் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் மூலம், அங்கு பதிவாகியிருந்த தடங்களை போலீஸாா் பதிவு செய்தனா். இதுகுறித்து கோட்டம்மாள் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.