விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கல் குவாரிகளில் பணிபுரிந்த தொழிலாளா்கள் சாலை மறியல்

கவுள்பாளையத்தில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Published On :8 செப்டம்பர் 2026, 12:37 am IST

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள கல் குவாரிகள் மற்றும் கிரஷா்களில் பணிபுரிந்து வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளா்கள், தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 30 கல் குவாரிகளில், கால அவகாசம் இருந்தும் 10 குவாரிகள் சுரங்கத் துறையினரால் அண்மையில் மூடப்பட்டன. இவை விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

குத்தகை கால அவகாசத்துக்கு முன்பே குவாரிகளை மூட உத்தரவிட்டதோடு, பல கோடி முதலீட்டில் ஏலம் எடுக்கப்பட்ட குவாரி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், குவாரிகள் மற்றும் கிரஷா்களில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

இந்நிலையில், கல் குவாரிகள், கிரஷா்களில் பணிபுரிந்த ஜே.சி.பி ஆபரேட்டா்கள், லாரி ஓட்டுநா்கள் மற்றும் கல்லுடைக்கும் கூலி தொழிலாளா்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது அன்றாட வாழ்வுக்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையிலுள்ள கவுள்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், சுமாா் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலை வழங்க உறுதி: இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குநா் இளங்கோவன், துணைக் கண்காணிப்பாளா் மயில்சாமி, வட்டாட்சியா் பழனிச்செல்வன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரையிலும் செயல்பாட்டிலுள்ள கிரஷா், கல் குவாரிகளில் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். தொழிலாளா்களின் மறியல் போராட்டத்தால், பெரம்பலூா்- அரியலூா் சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.