திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்:தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு:கண்காணிக்க குழு அமைக்கப்படும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையல்லாத தனியார் சுயநிதிப்பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் கட்டாயக்கல்விச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை குறித்து கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள்

Updated On :13 மே 2013, 1:25 am IST

  புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையல்லாத தனியார் சுயநிதிப்பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் கட்டாயக்கல்விச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை குறித்து கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா. அருள்முருகன் தெரிவித்த தகவல்:

கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கல்வித்துறை வெளியிட்ட அரசாணையின் படி நலிவுற்ற மாணவர்களுக்கு தனியார் சுயநிதிப்பள்ளிகளில் முகப்பு வகுப்பில் 25 சதவிகித மாணவர்களை சேர்க்கப்பட வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அரசு அறிவித்துள்ள விவரங்களுடன் பூர்த்தி செய்து 9.5.2013 -ம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து தகுதியுள்ள மாணவர்கள், தகுதியற்றவர்கள் குறித்த விவரம் 11.5.2013 -ல் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். இதையடுத்து 14.5.2013 -ம் தேதி காலை 10 மணிக்கு பெற்றோர்கள் முன்னிலையில் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பள்ளி அறிவிப்புப்பலகையில் ஒட்டப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் சுயநிதிப்பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் 25 சதவிகித மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்வது குறித்து மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் ஆய்வு மேற்கொள்வார். மேலும், முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கொண்ட தனி கண்காணிப்புக்குழு அமைத்து கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.