புதுக்கோட்டை கால்நடை பண்ணையில்மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மாவட்ட கால்நடைப் பண்ணை மற்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் இயங்கி வரும் வளாகத்தில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்-

புதுக்கோட்டையில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மாவட்ட கால்நடைப் பண்ணை மற்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் இயங்கி வரும் வளாகத்தில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்- லெனினிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் மாவட்ட அமைப்பாளர் க.சி. விடுதலைக்குமரன் தலைமையில் அண்மையில் அக்கட்சியின் மாவட்ட அமைப்புக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில் தமிழகத்திலுள்ள மொத்த நீர்நிலைகளில் 10 சதவிகிதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தபோதும், வறட்சி தொடர்கதையாகவுள்ளது. வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போனதால் குடிநீருக்காக மக்கள் அவதிபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழைநீர் நிலத்தடிநீராக மாறுவதைத்தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் வளர்க்கப்படும் தைல மரங்களைத் தடைசெய்ய வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த 5 அரசுப்பண்ணைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதியைப்பயன்படுத்தி வேளாண் பல்கலைக் கல்லூரியை நிறுவ வேண்டும்.

மக்களவைத் தொகுதிக்கு தேவையான (6 தொகுதிகள்) அனைத்துத்தகுதிகள் இருந்தும் ரத்து செய்யப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தர்வகோட்டையிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப்பேருந்து வசதி செய்து தர வேண்டும். பூக்கள் அதிகம் விளையும் ஆலங்குடி பகுதியில் வாசனைத்திரவியத் தொழிற்சாலையும், முந்திரி அதிகம் விளையும் கந்தர்வகோட்டையில் அரசு முந்திரித் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிர்வாகிகள் ரெ. மூக்கையன், காளிமுத்து, ஆர். கருணாநிதி உள்ளிட்டோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com