பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி ஊராட்சி மேலக்கல்லம்பட்டி தந்திரிக்கருப்பர் மற்றும் மலையக்கருப்பர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை காலை 9.45 மணியளவில் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் செய்திருந்தனர். விழாவையொட்டி அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை தந்திரிக்கருப்பர், மலையக்கருப்பர் கோயில் பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.