ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ்: நேபாளத்தை 72 ரன்களுக்குச் சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி!
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் பாகிஸ்தானின் அபார வெற்றி குறித்து...

பாகிஸ்தான் ஏ அணி வீரர்கள் - படங்கள்: எக்ஸ் / ஏசிசி மீடியா
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி நேபாளத்தை 72 ரன்களில் சுருட்டி, 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
தோஹாவில் நடைபெற்றுவரும் ஏசிசி ஆடவருக்கான ரைஸிங் ஸ்டார்ஸ் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ - நேபாளம் ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரோஹைல் நசீர் 64 ரன்கள் எடுத்தார். நேபாளம் சார்பில் ரஷித் கான் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த நேபாளம் அணி 17.3 ஓவர்களில் 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மயன் யாதவ் 41 ரன்கள் எடுத்தார். 9 நேபாள வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து சொதப்பினார்கள்.
பாகிஸ்தான் சார்பில் சுஃப்யான் மோகிம், முகமது ஹஸ்னைன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். இந்த அபார வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் சென்றது.
அரையிறுதியில் நவ.26ஆம் தேதி இந்தியா ஏ - இலங்கை ஏ அணியும், நவ.27ஆம் தேதி பாகிஸ்தான் ஏ - வங்கதேசம் ஏ அணிகளும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டியில் நவ.29ஆம் தேதி விளையாடுகின்றன.
Pakistan âAâ were once again clinical with the ball, capping off a flawless group stage campaign at the #DPWorldMensAsiaCupRisingStars2026 with another dominant performance ð#PAKvNEP #ACC pic.twitter.com/cq8cqu09DK
— Asian Cricket Council (@ACCMedia1) November 24, 2026
Summary
Pakistan A secures a resounding victory, bundling out Nepal A for 72 runs in asia cup rising stars
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


