தமிழகத்துக்கு காவிரிநீர் வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறினார் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.
அறந்தாங்கியில் த.மா.கா மாநில பொதுச்செயலாளர் சிலட்டூர் வி.கே.எம். முத்துக்குமார் இல்ல காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது: கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தில் வாடிக்கொண்டிருக்கும் பயிர்களைக் காப்பாற்ற காவிரிநீர் வழங்க மறுக்கிறது. அதை கர்நாடக பாஜக தலைவர்களும் ஆதரிக்கிறார்கள்.
மத்திய பாஜக அரசும் இதுகுறித்து கருத்து கூறாமால் மௌனமாக உள்ளது. இதை தமிழக மக்களின் சார்பாக கண்டிக்கிறேன்.
இலங்கை அரசு தமிழக விசைப்படகு மீனவர்களுக்கு அபராதம் விதிப்பதை மத்திய பாஜக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும். பாரதியார் பல்கலை. துணைவேந்தர் கணபதியின் செயல் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு என்றார்.
நிகழ்ச்சியில் சுரேஷ் மூப்பனார், மலேசிய தொழிலதிபர் புகாரி, தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் எஸ்.டி.ராமச்சந்திரன், ஆலங்குடி எம்.எல்.ஏ சிவ.வீ.மெய்யநாதன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உதயம் சண்முகம், சாமிநாதன் அதிமுக அம்மா அணி மாவட்டச்செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.