நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

திருமயம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.73 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.  

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.73 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.  
திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை  ஆய்வு செய்த அவர் மேலும் கூறியது: திருமயம் ஊராட்சியில்  ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா, மேலூர் ஊராட்சி, கரையான்பட்டியில் ரூ.8.50 லட்சத்தில் அங்கன்வாடி கட்டுமானப் பணி, வி.லெட்சுமிபுரம் ஊராட்சியில் ரூ.86,000 மதிப்பில் பண்ணைக்குட்டை பணி, வி.லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, ரூ.4.14 லட்சம் மதிப்பீட்டில் சாலையோரம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் பணி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.  
தொடர்ந்து, நெய்க்கோணம் ஊராட்சி, கொட்டையப்பட்டியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சத்தில் வீடு கட்டும் பணி, பனையப்பட்டி ஊராட்சியில்  ரூ.15 லட்சத்தில் ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் கட்டும் பணி, மலையக்கோவில் முதல் கும்பங்குடி சாலை வரை ரூ.1.78 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணி, பேரையூர் நாகநாதர் கோயிலில் ரூ.9 லட்சம் மதிப்பிலும், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.28 லட்சம் மதிப்பிலான புனரமைப்பு பணி என மொத்தம் ரூ.2.73 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.  ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.