பொன்னமராவதியில் மரம் வெட்டும் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த அவரது மனைவி, தம்பியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெ.சன்னாசி(45) மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா(31). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
விஜயாவுக்கும், சன்னாசி தம்பி கருப்பையாவுக்கு(40) தகாத உறவு இருந்ததாம். இதையறிந்த சன்னாசி மனைவி விஜயாவை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்ற சன்னாசி வீடு திரும்பவில்லை. தொடர்ந்து இவரை உறவினர்கள் தேடியபோது புதுக்கோட்டை சாலை ஓரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இது குறித்து சன்னாசியின் மகன் சூர்யா அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் காவல்துணை ஆய்வாளர் கோபாலசந்திரன், காரையூர் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், தாளம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிலிருந்த சன்னாசியின் தம்பி கருப்பையாவை சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் அண்ணன் சன்னாசியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், கொலைக்கு தூண்டுதலாக விஜயாவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

அம்புஜா சிமெண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!

ரயில் பயணிகளுக்கு... தத்கல் டிக்கெட் முன்பதிவில் ‘டோக்கன்’ முறை! எப்போது தெரியுமா?

தாமாகவே வருகைப் பதிவு செய்யும் பள்ளி மாணவர்கள்! ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


