பொன்னமராவதி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் ஆய்வு
பொன்னமராவதி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.


பொன்னமராவதி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
தொடக்கமாக பொன்னமராவதி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சத்தில் மேமணப்பட்டி முதல் கொல்லம்புஞ்சை வரையிலான சாலைப் பணி, அரசமலை ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்திலான மண்புழு இயற்கை உரம் தயாரித்தல் கொட்டகைப்பணி, சாத்தனூரில் ரூ 1.96 லட்சத்தில் கட்டப்பட்ட கால்நடை கொட்டகை, தாய் திட்டத்தின் கீழ் ரூ. 17.40 லட்சத்தில் அமைக்கப்படும் செட்டிக்குளம் மேம்படுத்துதல் பணி என மொத்தம் ரூ. 40.36 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மண்புழு இயற்கை உரங்களை அதிகளவு தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கவும், சாலைப் பணிகளில் தரமான பொருள்களை உபயோகிக்கவும், குளங்களை முறையாகச் சீரமைக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருள்களை கொண்டு கட்டி முடிக்கவும் அறிவுறுத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதியழகன், ஜெயந்திதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...