4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவ விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :22 அக்டோபர் 2018, 3:57 am

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவ விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நவராத்திரி விழா அக்.10ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி, மீனாட்சி, சிவலிங்கபூஜை, ஆண்டாள், சரஸ்வதி உள்பட பல்வேறு அலங்காரங்களில் அம்மன் தினந்தோறும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்வுகள் நடைபெற்றது.
தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற ஊஞ்சல் உற்ஸவ விழாவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திண்டுக்கல் காயத்ரி குழுவினரின் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.