புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வை 2701 பேர் எழுதினர்.
ஆண்டுதோறும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.1000 நான்காண்டுகளுக்கு அரசால் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இதில் நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில்
புதுக்கோட்டை மாவட்டத்தில், ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி, மணமேல்குடி,கீரனூர், கந்தர்வகோட்டை உள்ளிட்ட 12 அரசுப் பள்ளிகளில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் 2701 பேர் தேர்வு எழுதினர்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி, பிரகம்பதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வனஜா ஆய்வு மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.